இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான T20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து கேஎல் ராகுல், சூர்யகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர்.
குறிப்பாக கேஎல் ராகுல் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு பேட்டால பதிலடி தந்தார். 35 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய நிலையில், ராகுல் கேட்ச் ஆனார்.இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சூர்யகுமாரும் தனது சிக்சர் வேட்டையை தொடங்க, அவரும் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா இறுதியில் ருத்ரதாண்டவம் ஆடினார். குறிப்பாக கடைசி ஓவரில் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாச, 30 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.
Things went right down to the wire but it's Australia who won the first #INDvAUS T20I.#TeamIndia will look to bounce back in the second T20I.
— BCCI (@BCCI) September 20, 2022
Scorecard 👉 https://t.co/ZYG17eC71l pic.twitter.com/PvxtKxhpav
இதனால், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அக்சர் பட்டேலும் ஜாஸ் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 4 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வழக்கம் போல் புவனேஸ்வர் குமார் 17வது ஓவரில் 15 ரன்களும், ஹர்சல் பட்டேல் 18வது ஓவரில் 22 ரன்களும் கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது.