நகரேஷூ காஞ்சி என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது.
தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பச்சைப்பட்டு உடுத்தி திருவாபரணங்கள், அணிவித்து சம்பங்கி பூ மல்லிகைப்பூ மாலைகள் சூட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் லட்சுமி,சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காமாட்சி அம்மன் எழுந்தருளிய தங்க தேரினை உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் ஓம் சக்தி,பராசக்தி, கோஷமிட்டவாரு, வடம் பிடித்து இழுத்து செல்ல கோவில் வளாகத்தில் வலம் வந்து, நின்றது.
தங்கத்தேர் உற்சவத்தில் எழுந்தருளி காட்சி தந்த காமாட்சி அம்மனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.