Skygain News

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு..!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More