கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 17 என்கிற அரசு பேருந்து குச்சிபாளையம், குலதீபமங்கலம், விளந்தை, சொறையப்பட்டு வழியாக காடகாமன் நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது, அப்போது விளந்தை ஏரி கரையை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாடு ஒன்று குறுக்கே சென்றுள்ளது.
இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் ரமேஷ் என்பவர் சாதுர்த்தியமாக பேருந்தை இயக்கி பிரேக் போட்டதால் சாலையோர பள்ளத்தில் லேசாக சாய்ந்த நிலையில் மாட்டிக்கொண்டது, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர்த்தப்பினர்.
இச்சபம் குறித்து மணலூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது மாடு குறுக்கே வந்த நிலையில் சாலையோர பள்ளத்தில் பேருந்து மாட்டிக்கொண்டதில் அதிர்ஷ்ட வசமாக 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.