விஜய் நெல்சனின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகின்றார். மேலும் சரத்குமார், குஷ்பு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் என இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிரவைத்தது.
இதன் காரணமாக தற்போது பலத்த பாதுகாப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்றும், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் பட பாணியில் எமோஷனல் கலந்த படமாக இருக்கும் என படக்குழு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது.

பொதுவாக விஜய் படம் என்றாலே படப்பிடிப்பு முடிவதற்குள் வியாபாரம் ஆகிவிடும். அதுபோல தான் வாரிசு திரைப்படத்தின் வியாபாரமும் படப்பிடிப்பு நடக்கும்போதே முடிந்துவிட்டது. தற்போது இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 50 கோடிக்கு சன் டிவியும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடிக்கு அமேசான் நிறுவனமும் வாங்கியுள்ளது. படப்பிடிப்பு முடியும் முன்பே இப்படம் 120 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது .