உளுந்தூர்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக சாலை விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்து வருகின்றன இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வருவதால் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுகின்றன மேலும் தமிழக அரசு உத்தரவின் பேரில் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிகளை மீறி பெரும்பாலும் இருசக்கர அணிவதில்லை இதனால் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன
அதில் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில் உதவி ஆய்வாளர் அஷ்ட மூர்த்தி காவலர் அய்யாதுரை உள்ளிட்டோர் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணிவது குறித்தான அவசியம் குறிப்பு அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பொழுது விபத்து தேடும் பொழுது உயிரிழப்பும் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அவரிடம் விழிப்புணர்வு செய்து அவர்களை திருப்பி அனுப்பினர். இந்த விழிப்புணர்வு அறிவுரையை கேட்டுச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவோம் என கூறி உறுதிமொழி ஏற்று அங்கிருந்து சென்றனர்