Skygain News

10 திருமணம் செய்வது தான் என்னுடைய ஒரேய கனவு… 9தை தொடர்ந்து 10க்கு நுழையும் பிரேசில் மாயக்கண்ணன்..!

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசித்து வருபவர் ‘ஆர்தர் ஓ உர்சோ’. இவருக்கு ஏற்கனவே ஒன்பது மனைவிகள் உள்ளனர். லுவானா கஜகி என்பவரை முதலில் திருமணம் செய்திருக்கிறார். இதை அடுத்து மேலும் எட்டுப் பெண்களை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார்.

10 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரின் ஒரே லட்சியம் என்பதால் பத்தாவது திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லி வருகிறார். 9 மனைவிகள் இருந்தாலும் ஆர்தருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார்.

ஒவ்வொரு மனைவிக்கும் குழந்தை பிறக்க வேண்டும், அதாவது 9 மனைவிகளுக்கும் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருக்கிறார் ஆர்தர். இவர் 9 மனைவிகளுடன் ஒன்றாக குடித்தனம் நடத்தி வருகிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

9 மனைவி இருக்கையில் எந்த நேரத்தில் எந்த மனைவியுடன் தாம்பத்தியுடன் இருப்பது என்பது குறித்து ஒரு பட்டியலே போட்டு வைத்திருக்கிறார். இப்படி பட்டியலின்படி ஒவ்வொரு மனைவிடமும் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதால் அவர்களிடம் நேரம் செலவிடுவதால் குடும்பத்திற்குள் குழப்பங்கள் சிக்கல்கள் இல்லாமல் இருக்கின்றன என்கிறார் ஆர்தர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.