கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் இருந்து டாட்டா ஏசி மூலம் கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அரிசி ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனத்தை தடுத்து நிறுத்தி மடக்கிப் பிடித்தனர்
அதில் இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் குணமங்கலம் கிராமத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடந்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து டாட்டா ஏசி வாகனத்தில் இருந்த ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மற்றும் டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை ஓட்டுனர் தனபால் ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.