வகுப்பறையில் பீர் குடிப்பதும், பள்ளி விட்டு பேருந்தில் வரும்போது கும்பலாக சேர்ந்து பீர் அடிப்பதும், பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் போது பீர் அருந்திவிட்டு நடக்க முடியாமல் சாலையில் மயங்கி உட்கார்ந்து இருப்பதும், சாலையை கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதுமாக மாணவிகளின் மோசமான போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கேரளாவில் இதேபோல் பிரபலமான அரசு பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்ற பொது. அங்கே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நாலு பேர் ஒரு சிகரட்டை வைத்துக்கொண்டு, நான்கு பேரும் மாறி மாறி புதைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இதை பார்த்து ஏழாம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்து அங்கேயே நின்றிருக்கிறார்.

இங்கே பார்த்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்கள். சரி என்று பயத்தில் அந்த மாணவி சொல்லியும் கூட, அந்த மாணவியின் தலைமுடியை பிடித்து கத்திரிக்கோலால் கத்தரித்து விட்டிருக்கிறார்கள். இந்த மாணவிகளிடமிருந்து ஒரு வழியாக தப்பித்து ஓடி வந்த அந்த மாணவி, உடனடியாக பள்ளி ஆசிரியரிடம் சென்று புகார் அளித்துள்ளார். தலைமை ஆசிரியர் கொல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசாரும், கல்வி அதிகாரிகளும் வந்து சம்பந்தப்பட்ட அந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றம் உறுதியானம் அந்த மாணவிகள் கட்டாயம் சஸ்பெண்ட்செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.