மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது தீடிரென பேருந்து மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டியபோது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இரங்கலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.