தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 11.50லட்சம் மதிப்பிலான சரக்குகளை கலால் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்கு கடத்தி வருவதாக புதுச்சேரி கலால் துறைக்கு தகவல் வந்ததை அடுத்து கலால் துறை துணை ஆணையர் உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் கலால் துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு வந்தது இந்நிலையில் காலை 11 மணி அளவில் சேதராப்பட்டு கரசூர் பிடாரி அம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கு உரிய வகையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அறிந்த கலால் துறையினர் அதனை சோதனை செய்ததில் தவிடு மூட்டைக்கு மத்தியில் போலியான தமிழக மதுபான வகை பாட்டில்கள் 153 பெட்டிகளில் ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானம் என்றும் அது புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயற்சி செய்ததும் தெரிய வந்ததையடுத்து கடத்த முயன்ற வண்டி உரிமையாளர் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் கைது செய்து கலால் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்