சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன் அவரது தாயார் விஜயா அக்கா லலிதா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
வெங்கடேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி மனைவிகள் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மகன், தாய்,அக்கா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் வீட்டின் உரிமையாளரான வெங்கடேசனின் அக்கா லலிதா, வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணின் 16 வயது மகளை தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க பெண் கேட்டுள்ளார். இதற்கு பெண்ணின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி வெங்கடேசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுபோல் பலமுறை வெங்கடேசன் சிறுமையை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது வெங்கடேசனின் அக்கா லலிதா தனது ஆண் நண்பர்கள் வெங்கப்பன், கிரி, பாலாஜி ஆகிய முவரிடம் 3,500 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததை தாயிடம் கூறியுள்ளார்.
தாய் சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் சிறுமி 4 மாதம் கர்பமாக இருப்பதாக கூறியதையடுத்து சிறுமியின் தாயார் அதிர்ச்சிஅடைந்துள்ளார் . பின்னர் தனக்கு நடந்த கொடூரத்தை சிறுமி தாயாரிடம் கூறி கதாஹரி அழுதுள்ளார் . இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளான வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன்,அவரது தாய் விஜயா,அக்கா லலிதா,லலிதாவின் ஆண் நண்பர் வெங்கப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தலைமறைவாக உள்ள கிரி, பாலாஜி ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட தாய்,மகன்,அக்கா உள்பட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
16வயது சிறுமியை தாய்,மகன்,அக்கா ஆகியோர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.