நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,41,61,899 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,35,510 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, இந்த கொடுந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 730ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 15,549 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 659ஆக அதிகரித்துள்ளது.