விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், ஆசூர் ஊராட்சியில்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று
பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பசுமைப் போர்வையினை அதிகரிப்பதற்காகவும், அரசுக்கு
சொந்தமான இடங்களில் அடர்காடுகள், குறுங்காடுகள் மற்றும் மரக்கன்றுகள் வைத்து
வளர்த்தல்,போன்றவற்றிற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், விக்கிரவாண்டி
ஊராட்சி ஒன்றியம், ஆசூர் ஊராட்சியில், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில்
நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6,400 புளியங்கன்றுகளும், 5,900
பூவரசங் கன்றுகளும், 880 வேம்பு மரக்கன்றுகளும், 640 கொடுக்காப்புலி
மரக்கன்றுகளும், 350 நாவல் மரக்கன்றுகளும், 210 தேக்கு மரக்கன்றுகளும், 500
நெல்லிக்கன்றுகளும், 900 இலுப்பை மரக்கன்றுகளும், 407 காட்டு உசில
மரக்கன்றுகளும் என மொத்தம் 16,187 மரக்கன்றுகள் பதியம் செய்யப்பட்டு
வளர்க்கப்பட்டு, பல்வேறு இடங்களில் நடவு செய்திட தயார் நிலையில் உள்ளது.