இந்தியாவில் இதுநாள் வரை 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க உரிமை இருக்கிறது. 18 வயதை அடைந்த பிறகுதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடிகிறது.
இந்தநிலையில் தற்போது 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கோரி முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது .
இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய 18 வயது நிரம்பும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 17 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.