இந்தியாவில் இருக்கு பல முக்கிய துறைகளில் இன்று ஆண்களை விட பெண்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் . நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது .
அந்தவகையில் மலேசியா நாட்டில் மேலகாவில் 19-வது உலக கோப்பை பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் புதுச்சேரியை சேர்ந்த சாந்திலட்சுமி பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தற்காப்பு கலை விளையாட்டுகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பென்காக் சிலாட் (Pencak Silat) ‘சாந்தி லட்சுமி’ பல சுற்றுகளை கடந்து வெண்கல பதக்கத்தை வென்று நாட்டிற்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.