2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியை வெற்றிகரமா நடத்துவது ,போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஒடிசா முதல் மந்திரி அலுவலகம் சார்பில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர், சுரேஷ் மஹாபத்ரா, முதல் மந்திரியின் தனிப்பட்ட செயலாளர் வி.கே. பாண்டியன், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.இதில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை முன்பை விட சிறப்பாகவும்,பெரிய அளவிலும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.