பெங்களூரில் இருந்து கர்நாடக அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 50,000 மதிப்புள்ள 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது மணலூர்பேட்டை போலீசார் அதிரடி
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் வெளி மாநில மது பாட்டில்கள், கள்ளச்சாராயம் காச்சி விற்பனை தடுக்கவும், மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தப்பட்டு வருவதை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றன

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் அத்திப்பாக்கம் சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து திருக்கோவிலூருக்கு வந்து கொண்டிருந்த கர்நாடகா அரசு பேருந்தை சோதனை செய்தலில் பேருந்தில் இருந்து சாக்கு மூட்டையில் தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ எடை 50 ஆயிரம் மதிப்பிலான( ஹான்ஸ் பாக்கெட்டுகள்) மற்றும் பல தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் கண்டாச்சிபுரம் நாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.