Skygain News

தமிழகத்தைச் சேர்ந்த 14 கட்சிகள் உட்பட 253 அரசியல் கட்சிகள் முடக்கம் – சின்னங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை…

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது பெயர், தலைமை அலுவலகம் நிர்வாகிகள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்தால் அதை தேர்தல் ஆணையத்திற்கு உடனே தெரிவிக்க வேண்டும்.

அதில் சில அரசியல் கட்சிகள் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளன. இந்த கட்சிகள் செயல்படுகிறதா என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று சரிபார்த்தபின் 86 அரசியல் கட்சிகள் தங்களது முகவரியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கும் அந்த செயல்படாத கட்சிகளிடம் இருந்து பதில் இல்லை. இதனால் 86 கட்சிகள் தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 253 அரசியல் கட்சிகள் முடக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அத்துடன் கடந்த மே 25ஆம் தேதி முதல் விதிமுறைகளை பின்பற்றாத 537 கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி ,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் ,தமிழ் தேசிய கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம் ,தேசிய நல கட்சி, நமது திராவிட இயக்கம், மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி ,கொங்குநாடு முன்னேற்ற கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம் ,இந்துஸ்தான் தேசிய கட்சி ஆகிய 14 கட்சிகளும் செயலற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக்கழகமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More