இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கோப்பைக்காக தயாராகி வருகின்றது. இன்னும் 3 நாட்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரமே ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர். இவர்களுடன் தீபக் சஹாருக்கு மாற்றாக வந்துள்ள ஷர்துல் தாக்கூரும் பயணித்துள்ளார்.

மூவரும் நேரடியாக பெர்த்-ல் உள்ள இந்திய அணியின் முகாமில் இன்று இணைகின்றனர்.இந்நிலையில் இந்த மூன்று வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்