மகாராஷ்டிரா மநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கம் நாசிக் நகரத்திலிருந்து 16 முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டோரி தாலுகா பகுதியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மட்கிஜாம்ப், ஹட்னோர், நீல்வண்டி, ஜம்புட்கே, உம்ராலே, தலேகான் ஆகிய இடங்களில் உணரப்பட்டது .

இது ரிக்டர் அளவில் முறையே 3.4, 2.1 மற்றும் 1.9 என்ற அளவில் பதிவானது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது : இந்த நிலநடுக்கத்தின் மையம் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி பகுதியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .