துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது.

அடுத்தடுத்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது.
கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இப்படி அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது