Skygain News

நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் இருந்த 3 இலங்கை தமிழர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

சென்னை பெரியமேட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 13 பேரை மடக்கி சோதனை செய்த போது 7 1/2 டன் வெடிகுண்டுகள் தயாரிக்கும் மூல பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதனை பறிமுதல் செய்ததுடன் 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஜாமினில் வெளியே வந்ததில் மூன்று பேர் மட்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதுவரை போலீசாரின் பிடியில் மூன்று பேரும் சிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிலருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ்(என்ற)நிதி, கரன்(என்ற)யோக ராஜா, பாரதிதாசன் ஆகிய மூன்று இலங்கை தமிழர்கள் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் 3 பேரையும் தேடப்படும் குற்றவாளிகளாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் அறிவித்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.