பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் 320 பேர் உயிரிழந்துள்ளனர் .வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அந்நாட்டு பிரதமர் ஹெபாஸ் ஷெரிப் பார்வையிட்டார்.
கடந்த 5 வாரங்களாக காட்டுத்தனமாக பெய்து வரும் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளத்தில் சுமார் 13000 வீடுகள் முழுமையாக மூழ்கியது .

இதுவரை அந்த மாகாணத்தில் 46 சிறுவர்கள் உட்பட 127 பேரும். கராச்சி ,சிந்து மாகாணகளில் 70 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதற்கிடையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.