விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாய் லட்சுமி நகரை உள்ள நல்ல சேர்ந்தவர் சசிவிக்குமார்(47) இவர் கருவம்பாக்கம் அரசுப் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா விழுக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சசி விக்குமாரும் தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் காலை பள்ளிக்கு சென்று விட்டனர்.என்றும் இன்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே படுக்கை அறையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது, மேலும், அங்கிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 40சவரன் நகை,கால் கிலோ வெள்ளி பொருட்கள் பத்தாயிரம் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது,.
இது குறித்து ஆசிரியர் சசிவிக்குமார். ரோசனை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தலை மேலான காவல்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து தடயவியல் அறிஞர்கள் ஏடிஎஸ்பி சோமசுந்தரம்,சப் இன்ஸ்பெக்டர்கள் தக்ஷிணாமூர்த்தி,கல்பனா காவலர் சரவணன் கொண்ட குழு. வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இணைப்பைத் துண்டித்து, கடப்பாரையால் கதவை உடைத்து பின் உள்ளே சென்றுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் இது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் விழுப்புரம் மோப்பநாய் ராக்கி வர வைக்கப்பட்டு அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மோடி நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது