கோவையின் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு சுமார் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வழக்கின் அடிப்படையில் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.