Skygain News

துருக்கியில் களைகட்டும் வீதியில் குண்டு வெடிப்பு: சிதறும் உயிர்கள்..!

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்திக்லால் கடை வீதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்துள்ளது. இதில் அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் மக்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2015-2016 காலகட்டத்தில் துருக்கியை குறி வைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More