பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கும் சொந்த கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை அரசின் விதியை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வோம் என்று மதுரை எஸ்.பி. சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்படும். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனே விடுவிக்கப்பட மாட்டாது . நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இதன் மூலம் மட்டுமே வாகனங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு விதிமுறைகளை மீறி வாகனம் இயக்கியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் 329 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் 257 வழக்குகளும், புறநகர் பகுதிகளில் 62 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.