கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட கோவில் நடை நாளை வரை திறந்து இருக்கும் பின் இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்படும்.
அதன்பின்பு ஓண பண்டிகைக்காக செப்டம்பர் 6-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் 10-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். ஓணப்பண்டிகையின் போது சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மகா விஷேச பூஜைகள் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.

ஐய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.அந்த வகையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் ரூ.45 லட்சம் மதிப்பிலான 108 பவுன் தங்க சங்கிலியை காணிக்கையாக வழங்கி இருப்பது ஆச்சிரியம் அற்ற விஷியமாகும்.
வெளிநாடு வாழ் இந்தியரான அந்த பக்தர் நேற்று கோவிலுக்கு சென்று சன்னிதானம் முன்பு தங்க சங்கிலியை ஐய்யப்பனுக்கு காணிக்கையாக செலுத்தினார்.