புதுச்சேரி சோனாம்பாளையத்தில் மின்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் மின்துறை நிதி கட்டுபாட்டாளராக மோகன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மின்துறையின் GSTக்கு தனி கணக்கு தொடங்கபட்டு, அதில் பணம் செலுத்தபட்டு வருகிறது. இந்த கணக்குகளை ஆய்வு செய்த போது, கடந்த 2020 ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 55 லட்சத்து 75 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காசாளர் யோகேஷ் என்பவரிடம் கேட்ட போது அவர் சரியான பதிலை கூறவில்லை.
இது குறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில், மோகன்குமார் புகார் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து, யோகேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தினேன். அதில் கார் மற்றும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து போலீசார் யோகேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்