தஞ்சாவூர் மாவட்டம் நெதுவாசல்பட்டியில் நடைபெற்ற ஊர் திருவிழா ஒன்றில் ஒட்டு மொத்த ஊருக்கும் கிடா வெட்டி விருந்து கொடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஊரில் கடந்த 65 வருடங்களாக திருவிழா நடைபெறாததால் ஊர் மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக அங்கு திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக திருவிழா நடத்த தடைவிதிக்கப்பட்டது . இதையடுத்து கொரோனா முடிந்து இந்த வருடம் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது .

திருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டு ஊர் முழுக்க வீடு வீடாக சென்று கட்டணம் வசூலிக்கப்பட்டது . பூஜை, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது போக பிரமாண்ட ஊர் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விருந்துக்காக சுமார் 1000 கிடா வெட்டப்பட்டு, பாரம்பரிய முறைப்படி குழம்பு, வறுவல் செய்யப்பட்டது. அதோடு இனிப்பு , 3 சைட் டிஸ்கள் என்று பிரம்மாண்டமாக விருந்து வைத்து தயார் செய்யப்பட்டது. இது ஊர் மக்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 1000 வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளுக்கும் உணவு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஊர் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வரிசையாக அமர்ந்து உணவு உண்டனர். மக்கள் வரிசையாக அமர்ந்து வேறுபாடு இன்றி உணவு உண்டனர் . ஏழை - பணக்காரன், இந்த சாதி - அந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இதனால் கிராமமே மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் காணப்பட்டது.