திருக்கோவிலூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சுவாமி விவேகானந்தர் மரபு வழி சிலம்பு குருகுலம் அறக்கட்டளை சார்பில் நேதாஜி உலகக் கலை வளர்ச்சி நற்பணி மன்றம் இணைந்து உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று 30 நிமிடத்தில் சிலம்பம் சுற்றியும்,யோகா செய்தும், பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.
இந்த உலக சாதனை முயற்சியில் கலந்துக்கொண்ட அனைவரின் பெயரும் ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. .