சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை நடத்தி, அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட .அவரை நிறுத்தி சோதனையிட்டனா். ஆனால் அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லை.
இருப்பினும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதித்தனா். அப்போது அவருடைய உள்ளாடைகளுக்குள் ரூபாய் 11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் .
இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்த பணத்தை கொடுத்து, சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம்,கொடுத்து வர சொன்னதாகவும் . அதற்காக தனக்கு போகவர விமான டிக்கெட்கள் எடுத்து தந்து,செலவுக்கு பணமும் கொடுத்ததாக அவர் தெரிவித்தார் .
இதை அடுத்து பயணியிடம், இந்த பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன அந்த ஆசாமி யார்? என்று சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.