மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா (61). இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில்,நேறறு இரவு 11:15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார்.அதன் பின்பு அவா், இன்று அதிகாலை 3:15 மணிக்கு, சென்னையில் இருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்லவிருந்தாா். இதை அடுத்து,டைட்டில் மேத்தா வெளியில் செல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலேயே அமர்ந்திருந்தார்.
அதன்பின்பு அதிகாலை 2 மணியளவில் புனே செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான போா்டிங் பாஸ் இண்டிகோ ஏா்லைன்ஸ் கவுண்டரில் வாங்கினாா்.பின்பு பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு,விமானத்தில் ஏற தயாரானாா்.
அதிகாலை 2:45 மணிக்கு விமானத்தில் ஏறுவதற்காக,கேட் எண் 13 அருகே சென்றபோது,திடீரென மயங்கி கீழே விழுந்தாா். இதை அடுத்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான நிலைய ஊழியர்களுக்கு தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து, அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவர் ஏற்கெனவே கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று அறிவித்தனா்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.