கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் எல்லையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றி வந்த பொழுது பேருந்தின் ஓட்டுனர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி வந்ததால் இந்திலி முருகன் கோயில் முன்பு மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து தீப்பொறி பறந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். அந்தப் பேருந்து மோதிய வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பேருந்தின் மீது மின்சாரம் பாயாமல் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.