கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு அதன் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்த நிலையில் தன்னுடைய திருமண நிகழ்ச்சிக்காக சின்னசேலம் அருகே இருக்கக்கூடிய தாகம் தீத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து ராயர் பாளையம் கிராமத்தில் உள்ள மணப்பெண் வீட்டார்களை ஏற்றிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு சின்னசேலத்தில் இருந்து ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தனியார் பள்ளி வேன் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார் இதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் சாலையோரத்தில் உள்ள தடுப்பு கட்டையின் மீது மோதி ஏரிக்கரையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .
இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 4 சிறுவர்கள் உட்பட 29 மேற்பட்டவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் பள்ளி பேருந்துகளை திருமணம் நிகழ்ச்சிக்காக எடுத்து சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பள்ளி பேருந்துகளை நிகழ்ச்சிகளுக்கு எடுத்து செல்ல அனுமதி யார் வழங்கியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர் .