விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் நேதாஜி இவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செல்வதற்காக வாகனத்தை எடுத்த போது என்ஜினில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு திடீரென சீட்டுக்கு அடியில் சென்றதை கண்ட நேதாஜி வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு விலகி நின்றுள்ளார் . இதனை அடுத்து மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் வாகனத்தை பிரித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி 2 அடி நீளமுள்ள நல்ல பாம்பை முள் செடிக்குள் விரட்டி அடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பாம்பு புகுந்த தகவல் ஊருக்குள் பரவ அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடியதால் மேலும் அந்த இடம் மேலும் பரபரப்பானது.