கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாரதபள்ளி மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி பந்தல் கட்டும் தொழிலாளியான இவரது மனைவி புஷ்பபாய் (55) அருகில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி மாயமானார் இதையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆற்றில் குளிக்க சென்று மாயமான பெண்மணியை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் மலையோர பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடர்ந்து 800கன அடி உபரிநீர் வெளியேற்றபட்டுவருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றுகொண்டிருப்பதையடுத்து மாயமான புஷ்பபாயை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
ஆற்றில் குளிக்க சென்று மாயமான புஷ்பபாய்க்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் பிள்ளைகள் உள்ளனர்