கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக துபாய் சென்றது தான் ஹாட் டாபிக்காக வலம் வருகின்றது..சின்னத்திரை தொடர்களிளும் ,சில படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பரிட்சயமானவர் பாவ்னி, இவர் பிக்பாஸ்ஸில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில அதே சீசனில் வைல்ட் கார்ட் மூலம் வந்தவர் அமீர், நடன மாஸ்டரான இவர் நிகழ்ச்சியிலேயே பாவ்னியிடம் தனது காதலை வெளிபடுத்தினார். ஆனால் நிகழ்ச்சி முடிந்து சில நாடகள் கழித்தே அவரின் காதலை ஏற்றார் பாவ்னி.இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிக்ழ்ச்சியில் இவர்களில் கொமிஸ்ட்ரி ‘இவர்கள் நிஜ ஜோடிகளானால் நன்றாக இருக்கும்’ என பார்வையாளர்களை சொல்ல வைத்தது. அதற்கேற்ப இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆனார்கள் அமீர்-பாவ்னி ஜோடி. தற்பொழுது இவர்கள் தல அஜித் நடிப்பில் உருவாகும் துணிவு படத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி அஜித்துடன் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் அதனை உறுதி செய்தது.
#AmirADS #Pavni
— Bhai (@salyabhai1) October 27, 2022
Enjoy your journey & the event. Have a safe trip. ❤️ pic.twitter.com/MaLOhpHHFP
இந்த நிலையில் விரைவில் திருமணம் செய்ய உள்ள இந்த ஜோடிகள் தற்சமயம் துபாய் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதற்கான புகைப்படத்தை பாவ்னி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.