டெடி, சார்பட்டா பரம்பரை என் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த ஆர்யா தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது.
நாணயம், மிருதன், டிக்டிக்டிக், டெடி படங்களின் வரிசையில் சக்தி சௌதர்ராஜன் இயக்கத்தில் ஏலியன்கள் பற்றிய படமாக தற்போது ‘கேப்டன்’ படம் வெளியாகியுள்ளது. கேப்டன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) டீமுக்கு செக்டர் 42ல் என்ன நடக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
ஏற்கனவே அங்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை. அப்படி அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறிய செல்லும் ஆர்யாவின் டீம் minotaur எனும் ஒரு வகையான பிரேட்டரிடம் சிக்கிய நிலையில் தப்பித்ததா? எப்படி தப்பித்தனர்.

அந்த உயிரினம் அங்கு வர என்ன காரணம் என்பது தான் கேப்டன் படத்தின் கதை. ஆனால் அவரது முந்தைய படங்களில் திரைக்கதையில் இருந்த அழுத்தம் இந்தப்படத்தில் இல்லாதது மிகப்பெரிய குறை. மொத்தத்தில் தமிழில் ஏலியன் வகையறா படம் ஒன்றை இயக்க முயற்சித்து அதில் பாதி கிணற்றை தாண்டியுள்ளார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.இந்நிலையில் ஆர்யாவின் முந்தைய படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது