தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 தொடரில் அரையிறுதியில் பாகிஸ்தான் – நியூஸிலாந்து மற்றும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.இதில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் யார் மோத போகிறார்கள் என்பது குறித்து ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களுடன் பேசிய டிவில்லியர்ஸ், இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இந்தியாவுக்கு இருக்கும். இதில் மட்டும் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் தான் மோதிக் கொள்வார்கள்.அதில் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்று, டி20 உலக கோப்பையை கைப்பற்றும்.
இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் பலரும் பார்மில் இருக்கிறார்கள். சூரிய குமார் யாதவ் விராட் கோலி ஆகியோர் நன்றாக விளையாடிய வருவது இந்திய அணிக்கு நிச்சயம் நல்ல விஷயம் தான்.ரோஹித் சர்மாவை பொறுத்தவரை அவரும் முக்கியமான ஆட்டத்தில் பார்முக்கு திரும்பி ரன்களை குவிப்பார் என நம்பிக்கை இருக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. இந்த நிலையில் டிவில்லியர்ஸ், இந்தியா நியூசிலாந்து இறுதி போட்டியில் எதிர்கொண்டு கோப்பையை வெல்லும் என்று கூறியிருக்கிறார்.