இதுக்குறித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற தன்னுடைய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக விளங்கி, வளமான இந்தியாவை உருவாக்க பாடுபட்டவரும்; வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் சரியான வழிகாட்டியாக விளங்கியவருமான, பல்துறை வித்தகர், பாரத ரத்னா திரு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரது ‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம்!” என்று கூறியுள்ளார்.
இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, ஏவுகணை நாயகன்,அனைவராலும் விரும்பப்படும் எளிய மனிதர், குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் ஐயா பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன். pic.twitter.com/nqLPparkgS
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) October 15, 2022
அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, ஏவுகணை நாயகன்,அனைவராலும் விரும்பப்படும் எளிய மனிதர், குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் ஐயா பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல்துறை வித்தகர், பாரத ரத்னா திரு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரது 'வல்லரசு இந்தியா' கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம்!
— O Panneerselvam (@OfficeOfOPS) October 15, 2022
“நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற தன்னுடைய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக விளங்கி, வளமான இந்தியாவை உருவாக்க பாடுபட்டவரும்; வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் சரியான வழிகாட்டியாக விளங்கியவருமான,
— O Panneerselvam (@OfficeOfOPS) October 15, 2022