Skygain News

வெறித்தனமாக வெளியான சூர்யா 42 மோஷன் போஸ்டர்..வேற லெவல்ல இருக்கே..!

சூர்யா தற்போது பாலாவின் வணங்கான் படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக வெளியான சூர்யாவின் படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருவதால் அவரின் அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

வணங்கான் படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில தினங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டரை பார்க்கும்போது ஏற்படும் ஃபீல் வேற லெவலில் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். சூர்யாவின் முகத்தை காட்டவில்லை. இருப்பினும் போஸ்டர் அருமையாக உள்ளது.

இதைத்தொடர்ந்து இப்படம் பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் வரிசையில் இடம்பெறும் என்கிறார்கள் ரசிகர்கள்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.