அஜித் தற்போது வலிமை படத்திற்கு பிறகு தற்போது வினோத்தின் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகின்றார். வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கும் முனைப்பில் இருக்கின்றார் அஜித்.
கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் ஏ.கே. 61 படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். அஜித்துக்கு பைக் ரைடிங் செல்வது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் தன் பைக்கை எடுத்துக் கொண்டு காஷ்மீர், லடாக், இமாலய பகுதி, பஞ்சாபில் ரைடிங் சென்றார். அவருடன் 16 பேர் சென்றனர். இந்நிலையில் அஜித்துடன் சேர்ந்து மஞ்சு வாரியரும் பைக் ரைடிங் சென்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அஜித்துடன் மஞ்சு வாரியர் பைக் ரைட் சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Manju warrior in trip 🤩#AjithKumar pic.twitter.com/5DqcbRCT0n
— Prakash (@prakashpins) September 2, 2022