தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்னவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரகசியமாக திருமண செய்துகொண்ட இந்த ஜோடி, கடந்த மாதம் தான் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதோடு தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் திவ்யா.இதையடுத்து சில நாட்களிலேயே அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவர் எட்டி உதைத்ததில் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்தபடி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து திவ்யாவின் குற்றச்சாட்டு அர்னவ் மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது அர்னவ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசியுள்ள அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தானும் அர்னவ்வும் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது எங்களிடையே சண்டை வந்தபோது அங்குள்ள மால் ஒன்றில் வைத்து அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த சமயத்தில் அர்னவ் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த திருநங்கை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.