விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்களில் ஒருவர் தான் அஸ்வின். என்னதான் அதற்கு முன்பு சில படங்கள், விளம்பரங்கள் என நடித்திருந்தாலும் அஸ்வினை இந்நிகழ்ச்சி வேற லெவெலில் பிரபலமாக்கியது.
அதன் பின் பல ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் ,திரைப்படங்கள் என பிஸியானார் அஸ்வின். இந்நிலையில் அஸ்வின் ஹீரோவாக நடித்த முதல் படமான என்ன சொல்ல போகிறாய் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நான் கதைகளை கேட்கும் போது பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என பேசியிருந்தார். இதனை விமர்சித்தும், ட்ரோல் செய்தும் பலர் அஸ்வினை திட்டி தீர்த்தனர்.இந்நிலையில் அண்மையில் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த சீரிஸில் ஆங்காங்கே அஸ்வினை கலாய்த்து ஒரு சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்காக இயக்குனர் அறிவழகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அஸ்வின்.

இவ்வாறு பிரபல இயக்குனரை அஸ்வின் தாக்கி பேசியது தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது
Ak அஸ்வின் சரமாரியாக தாக்கப்பட்டார். #Varisu pic.twitter.com/GnQ8gw9OgM
— 彡Mr 𝗕𝗲𝗮𝘀𝘁 𓀠⚡️ (@itz__Beast) August 21, 2022