குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் பின்னர் பல படங்களில் வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் உட்பட முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்ட பப்லு செட்டிலானது சென்னையில்தான்.
56 வயதான பப்லு ப்ரித்திவிராஜ்க்கு பீனா என்ற மனைவியும் அஹெத் என்ற 27 வயது மகனும் உள்ளார்கள். அஹெத் ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். இதனால் பப்லுவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக இருவரும் பிரிந்து இருந்தனர்.
இருப்பினும் தனது மகனுக்கான அனைத்து தேவைகளையும் பப்லுவே பார்த்து வந்தார்.இந்நிலையில் நடிகர் பப்லு, மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பப்லுவுக்கு மலேசியாவில் சில பிஸ்னஸ்கள் இருப்பதாகவும் அப்போதுதான் அந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மேலும் அந்த பெண் பப்லுவின் மகனை விட வயதில் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது