Skygain News

பரத் நடிப்பில் வெளியான மிரள் படம் எப்படி ? வெளியான விமர்சனம்..!

பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் மிரள். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து உருவாகியுள்ளது. ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரசாத் இசையமைத்துள்ளார்.காதல் திருமணம் செய்து கொண்ட பரத் – வாணி போஜன் இருவரும் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.இதற்கு பரிகாரம் செய்ய பரத் குடும்பத்துடன் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர்.

அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில் வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார்.

அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதே மிரள் படத்தின் கதை. வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்துள்ள இயக்குனர் அதற்கு வலு சேர்க்கும் விதமான திரைக்கதையை உருவாக்கவில்லை.இந்த மாதிரியான திரில்லர் படங்களுக்கு தேவையான திகில் சம்பவங்கள், விறுவிறுப்பான காட்சிகள் படம் முழுக்க இல்லாமல் போனது படத்தின் பலவீனம்.இருப்பினும் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்பதே பல ரசிங்கர்களின் கருத்தாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More