நடிகர் விக்ரம் கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் வெளியாகி தற்போது 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் விக்ரமும் தன்னுடைய சினிமா கேரியரில் 32 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
நடிக்க வந்த முதல் 9 ஆண்டுகள் போராட்டம் தான். பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் ரிலீஸான பிறகே விக்ரமின் கெரியர் பிக்கப் ஆனது. அதன் பிறகு அவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி பெற்றார் விக்ரம்.
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. 💛 இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit. pic.twitter.com/fv2Pz56IUL
— Aditha Karikalan (@chiyaan) October 17, 2022
இந்நிலையில் விக்ரம் தன் சமுகப்பக்கங்களில் இத்தனை வருடங்கள், அத்தனை கனவுகள், முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள், நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே என்று தெரிவித்துள்ளார். இந்த 32 வருடங்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.