Skygain News

அட இவரும் பிக் பாஸ் வீட்டுக்கு போறாரா ? அப்போ பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காதே..!

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதையடுத்து இந்த வருடமும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் நிலையில் இணையத்தில் போட்டியாளர்களின் தகவல் வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா,கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.

இதுதவிர பிரபல யூடியூப்பரான ஜி.பி.முத்துவும் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரும் சிம்புவின் தீவிர ரசிகருமான ‘யூடியூப்பர்’ கூல் சுரேஷ் போட்டியாளராக பங்கேற்க உள்ளாராம்.

அடுக்கடுக்கான வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்து வரும் கூல் சுரேஷ், பிக்பாஸில் வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகவல் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More